இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா ராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்மையில் பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணப் படமாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த புதிய வீடியோ காட்சிகள் போலியானது என்ற இலங்கை அரசின் வாதத்தை மறுத்துள்ள அப்படத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரே, இந்திய அரசு தனக்கு விசா வழங்குவதை காரணமின்றி தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுக்குறித்து அவர் அளித்த பேட்டிவிபரம் :
கேள்வி :
இசைப்பிரியா குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ள போலியான படம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன செல்கிறீர்கள்?
பதில்:
எல்லாவற்றையும் மறுக்கும் போக்கை நிறுத்திக் கொண்டு, இலங்கை அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் இந்த வீடியோ காட்சிகளை அந்த நாட்டு அரசுக்கு கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது இலங்கை அரசு இந்த காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எல்லா வீடியோ காட்சிகளையும் பார்த்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி விட்டது என்று தோன்றுகிறது. இது உண்மையிலேயே ஒரு சிக்கலான பிரச்னை தான்.
கேள்வி:
உங்களுக்கு விசா அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது இந்திய அரசிடம் இருந்து ஏதாவது தகவலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறீர்களா?
பதில்:
நான் தற்போது பதிலுக்காக காத்திருக்கவில்லை.
ஆனால் கடந்த 8 மாதங்களாக நான் காத்துகொண்டிருந்தேன். இந்த பிரச்னை 8 மாதங்களுக்கு முன் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்வதாக இருந்தது.
எனது தயாரிப்பாளர் சகாவுக்கு விசா வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு வழங்கப்படவில்லை.
அப்போது முதல் நான் விசாவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். விசாவுக்கு விண்ணப்பித்து இருப்பதாக பதிவு செய்துவிட்டு எனது பாஸ்போர்ட்டை அவர்கள் திரும்ப கொடுத்து விட்டார்கள்.
அப்போது முதல் நான் விசாவுக்க்காக காத்திருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு கடிதங்கள், இ-மெயில்கள் அனுப்பியுள்ளேன்.
அவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளேன். இருந்தும் விசா எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.
தூதரகத்தில் இருந்து சமாதானப்படுத்தும் வகையிலான பதில்கள் மட்டும் கிடைக்கிறது ஆனால் விசா கிடைப்பதில் முன்னேற்றம் எதுவும் இல்லை.
காலம் செல்லச் செல்ல இந்திய அரசு எனக்கு விசா வழங்க தயாராக இல்லை என்பது மிக தெளிவாக தெரிந்துவிட்டது. இது ஒரு கவலையளிக்கும் விஷயம் என நான் நினைக்கிறேன்.
கேள்வி:
உங்களுடைய ஆவணப் படத்தை திரையிட இந்தியாவுக்கு வர முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்:
பலமான கொள்கைகள், ஜனநாயக ஆதரவு, பேச்சு சுதந்திரம் போன்றவை சிறந்து விளங்கும் இந்தியா போன்ற ஒரு நாடு, ஒரு ஆவணப் படத்தை பற்றி பேச வரும் ஒரு நபரை தடுக்க நினைக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இந்த படம் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தது. இந்தியாவுக்கு முக்கியமான பல பிரச்னைகளை இந்த படம் எழுப்புகிறது.
0 comments:
Post a Comment