Cine


சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 4 ரயில் பெட்டிகள் இந்த சோதனை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக 800 மீட்டர் தொலைவுக்கு மட்டும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில், 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மொத்தம் 45 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் வரை 23 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் ரயில்நிலையம் முதல் பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top