Cine

சிகாகோ:சுமார் 227 கிலோ எடை கொண்ட குண்டு வாலிபர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் அமெரிக்காவில் அவரது குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஷெனஸ், கிறிஸ்டினா ஷெனஸ் தம்பதியின் மகன் கெவின் ஷெனஸ் (22). ஹார்மோன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட கெவின் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகனை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து வந்தனர். மருத்துவ செலவிற்காக ஏராளமான பணம் செலவு செய்ததால் கெவினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாமல் பெற்றோருக்கு பண கஷ்டம் ஏற்பட்டது. இதனால் பிரான்சிற்கு அழைத்து சென்று கெவினுக்கு வீட்டில் இருந்தபடி சிகிச்சையளிக்க பெற்றோர் முடிவு செய்தனர். 

சிகாகோவில் தங்கியிருந்த தம்பதி, மகனை அழைத்து செல்ல பிரிட்டிஸ் ஏர்வே நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் மகன் எடை 500 பவுன் (227 கிலோ) உள்ளதால் அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்தது. மூச்சுவிட சிரமப்பட்டு வரும் கெவினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் பயணம் செய்ய மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சிகாகோவில் பிரான்ஸ் தம்பதி தவித்து வருகிறார்கள். கெவினை ரயில் மூலம் நியூயார்க் அழைத்து சென்று அங்கிருந்து கப்பலில் பிரான்சிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். குண்டு வாலிபருக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top