மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான கங்குலி தலைப்பாகை சூட்டி மகிழ்ந்தார். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுராஜித், துர்கா சிலையை தெண்டுல்கருக்கு வழங்கினார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, தெண்டுல்கருக்கு 199 தங்க இலைகளை கொண்ட ஆலமரத்தின் நடுவில், டாஸ் போட்ட தங்க நாணத்தை வைத்து பரிசளித்தார்.
தெண்டுல்கர் 2-வது இன்னிங்சில் விளையாட வரும்போது ஹெலிகாப்டர் கொண்டு 199 கிலோ ரோசாப்பூ தூவப்படும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
0 comments:
Post a Comment