Cine


திருச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டி இந்தியா பங்கேற்க கூடாது என்று பா.ஜனதா சார்பில் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் பா.ஜனதா நிலைபாடு குறித்து அகில இந்திய தலைவர் அறிவிப்பார்.
இந்த பிரச்சினையில் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இந்தியா பங்கேற்க கூடாதுஎன தங்கள் கருத்துகளை தெரி வித்துள்ளனர். ஆனால் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இந்த பிரச்சினையில் அவரது கருத்தை கூறவில்லை. ப.சிதம்பரம் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
நரேந்திரமோடிக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி சம்பவத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என காரணம் காட்டுகிறார்கள். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்தது சந்திசேகர் அரசுதான் என்பது அவர்களுக்கு தெரியாதா?.
காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அனுதாப அலையை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு கூட அறிவிப்போம்.
தமிழக அரசு பஸ்களை இரட்டை இலை சின்னம் வரைந்தது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 
பேட்டியின் போது தேசிய செயலாளர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் பார்த்திபன், மண்டல தலைவர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன், மாவட்ட வர்த்த கபிரிவு தலைவர் கையிலை ஆர்.வி.எஸ்.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment

 
Top