மனித உரிமைகள் மீறல்: ‘இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதைகள்’ இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், யாழ்ப்பாணம் சென்றபோது, தமிழ் மாகாண முதல்–அமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழர் கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு இல்லத்துக்கும் சென்று அவர் பார்வையிட்டார்.
அதன்பின் இணைய தளத்தில் அது குறித்து கருத்து தெரிவித்த டேவிட் கேமரூன், ‘‘நான் இங்கு சந்தித்துப் பேசியவர்கள் தெரிவித்த தகவல்கள் கண்ணீரை வரவழைக்கும் துயரக்கதைகளாக இருந்ததாக’’ குறிப்பிட்டு இருக்கிறார்.
‘‘கடந்த 1948–ம் ஆண்டுக்குப்பிறகு யாழ்ப்பாணம் சென்ற ஒரே வெளிநாட்டு தலைவர் நான்தான். அங்கு நடைபெற்ற உறைய வைக்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க முதலில் விரும்புகிறேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்’’.
உதயம் தமிழ் பத்திரிகையாளர்களுடன் நடந்த சந்திப்புக்குப்பிறகு, ‘‘வடக்கு இலங்கையில், தங்கள் உயிரைப் பயணம் வைத்து தினசரி பத்திரிகையை நடத்திவரும் பத்திரிகையாளர்களை சந்தித்ததில் பெருமைப்படுவதாக’’ அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
0 comments:
Post a Comment