சர்வதேச அளவில் வேட்டை சிறுவர், சிறுமிகளை ஆபாச படம் எடுத்த 350 பேர் கைது
சிறுவர், சிறுமிகளை ஆபாச படம் எடுக்கும் கும்பலுக்கு எதிராக சர்வதேச அளவில் நடத்திய வேட்டையில் ஆசிரியர்கள், பாதிரியார்கள், டாக்டர்கள் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர். 386 குழந்தைகளை போலீசார் மீட்டார்கள்.
ஆபாச படம்
சிறுவர், சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது கொடூர குற்றமாக கருதப்படுகிறது. கனடா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் இது சட்ட விரோதமாகும். கனடா நாட்டில் திருட்டுத்தனமாக சிறுவர், சிறுமிகளை வைத்து வீடியோவில் ஆபாச படம் பிடித்து வெளியிடும் தொழிலில் அதிகரித்து.
எனவே இதை ஒடுக்க டொராண்டோ போலீசார் திடீர் வேட்டையில் இறங்கினர்.
எனவே இதை ஒடுக்க டொராண்டோ போலீசார் திடீர் வேட்டையில் இறங்கினர்.
முக்கிய புள்ளி சிக்கினார்
அப்போது டொராண்டோ நகரில் கடந்த 8 ஆண்டாக இந்த ஆபாசப்படம் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த 350 பேர் பற்றிய விவரம் கிடைத்தது.
இதனை அடுத்து ஆசிரியர்கள், டாக்டர்கள், நடிகர்கள் உள்பட 350 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் 100 பேர் கனடாவிலும், 76 பேர் அமெரிக்காவிலும், 65 பேர் ஆஸ்திரேலியாவிலும் மீதி 109 பேர் வேறுசில நாடுகளிலும் சிக்கினார்கள் என டொராண்டோ நகர போலீஸ் அதிகாரி ஜோயான் பியாக் தெரிவித்தார். மேலும் இந்த கும்பலிடம் இருந்து 386 குழந்தைகளை விடுத்து இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment