Cine

பாக். தீவிரவாத இயக்க தலைவரின் மகன் சுட்டுக்கொலை; இந்திய தூதரக தாக்குதலில் தொடர்புடையவர்!!

பாகிஸ்தானில் செயல்படும் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி. இவருடைய மூத்த மகன் நசிரூதின் ஹக்கானி நேற்று  இரவு இஸ்லாமாபாத் அருகே உள்ள பராகாஹூ என்ற இடத்தில் மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ஆனால் போலீசார் இந்த சம்பவத்தை உறுதி செய்ய மறுத்து விட்டனர்.
கொல்லப்பட்ட நசிரூதின் ஹக்கானி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைக்கு எதிராகவும், காபூல் நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர். மேலும் ஹக்கானி அமைப்பின் முக்கிய பேச்சுவார்த்தை பணிகளில் ஈடுபட்டு வந்தவர். முன்பு வடக்கு வசிரீஸ்தான் பகுதி ஹக்கானி தீவிரவாத இயக்கத்தில் அதிக ஈடுபாடு வைத்திருந்தார். ஏற்கனவே ஜலாலுதீனின் 3 மகன்கள் கொல்லப்பட்டு விட்டனர்.

0 comments:

Post a Comment

 
Top