புயலால் சின்னாபின்னமான பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ரூ.3,150 கோடி உதவி
பிலிப்பைன்ஸ் நாட்டை கடந்த 8–ந் தேதி ஹையான் புயல் தாக்கியது. மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் பிலிப்பைன்ஸ் சின்னாபின்னமாகி உள்ளது.லட்சக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்து வீதிக்கு வந்து விட்டனர். அவர்கள் உணவு, நிவாரண பொருட்களுக்காக ஏங்கித் தவிக்கின்றனர்.இந்த புயலில் 2000, 2500 பேர் இறந்திருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்ததாக அதிபர் பெனிக்னோ அகினோ தெரிவித்தார்.
உலகமெங்கும் இருந்து பல்வேறு அமைப்புகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவிக்கரத்தை நீட்டியுள்ளன. இந்த நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கி பிலிப்பைன்ஸ் புயல் நிவாரணப்பணிகளுக்காக 523 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.3,150 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது.இந்த நாட்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் கடன் வழங்கவும் ஆசிய வளர்ச்சி வங்கி முன் வந்துள்ளது.
0 comments:
Post a Comment