Cine

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இன்று மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பிரதமர் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கைச் செல்வதுடன், வடக்கு மாகாணத்தில் இந்திய அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரதமருக்கு பதிலாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமித் அன்சாரியை இலங்கை செல்லுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டதாகவும் அதனை அவர் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top