Cine

காமென்வெல்த் மாநாட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு:

காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காமென்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
06 Nov 2013

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top