2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, செவ்வாய் கிரகத்தை நோக்கிச் மங்கல்யான் விண்கலத்தை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தை அமெரிக்கா கடந்த 1960-ம் ஆண்டு முதல் ஆய்வு மேற் கொண்டு வருகிறது. அதற்காக செவ்வாய்க்கு இதுவரை 21 தடவை விண்கலத்தை அனுப்பியுள்ளது. செவ்வாய்க் கிரகம் குறித்த தகவல்களை அறிய அனுப்பப்பட்டிருக்கும் இந்தியாவின் ‘மங்கள்யான்’ விண்கலத்தைத் தொடர்ந்து அமெரிக்காவும் ‘மேவன்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் ‘நாசா’வினால் நேற்று அமெரிக்க நேரப்படி மதியம் 1.28 மணிக்கு அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கனவரல் மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. .இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அதாவது அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் 22-ந்தேதி செவ்வாயை அடையும். அங்கு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராயும்.செவ்வாய் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய ‘மங்கன்யான்’ என்ற விண்கலத்துக்கு முன்னதாகவே, அமெரிக்காவின் ‘மாவென்’ விண்கலம் அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் 22-ந்தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைகிறது.
‘மாவென்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப் பரப்புக்கு மேல் 6 ஆயிரம் கி.மீ உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். இருந்தாலும் 3 முறை செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்புக்கு 125 கி.மீ தூரம் நெருக்கமாக வந்து ஆராய்ச்சி நடத்தும். அமெரிக்காவின் ‘மாவென்’ விண்கலம் ரூ.4030 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபட் டுள்ளது. இது 2,450 கிலோ எடை கொண்டது. 37.5 அடி நீளம் உடையது. பார்ப்பதற்கு பஸ் போன்று உள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலம் விண்ணில் பறந்தது. அமெரிக்காவின் ‘நாசா’ மையம் செவ்வாய் கிரகத் துக்கு ஏற்கனவே ‘மார்ஸ் ரோவர்’ (என்டீவர்) என்ற விண்கலத்தை அனுப்பி யுள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியை ஆய்வு நடத்த அனுப்பப் பட்டுள்ளது. இந்த விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. தற்போது அதன் நிலப்பரப்பு, மலைகள் போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.
0 comments:
Post a Comment