இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
மோடிக்கு விசா வழங்குவது குறித்த பிரச்னையை ஊடகங்கள்தான் மிகைப்படுத்தி வருவதாக கூறிய அவர், இது அமெரிக்காவைப் பொறுத்தவரை பெரிய பிரச்னையல்ல என்றார்.
அமெரிக்காவின் விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால் அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரி கூறினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு முன் பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோதும், இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வந்ததாக அமெரிக்க உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று, நரேந்திர மோடி குறித்த கவலை அமெரிக்க அரசிடம் பெரிய அளவில் இல்லை என அந்நாட்டைச் சேர்ந்த மற்றொரு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment