Cine


இலங்கையில் நடைபெறயுள்ள காமான்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் அங்குள்ள தமிழர்களுக்கு உதவ இயலாது என பிரிட்டன் பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கேமரூன் பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்து இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள கேமரூன், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மனிதஉரிமை மீறல் குறித்து,சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என மாநாட்டின் போது அந்நாட்டு அரசை வற்புறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடக்குமாகாணத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து நேரில் பார்வையிட உள்ளதாகவும் கேமரூன் கூறியுள்ளார். போர் முடிந்த பின் அங்கு நிகழ்ந்த குற்றங்களுக்கு இதுவரை ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லை எனவும் மாநாட்டில் பங்கேற்காமல் போனால் அந்நாட்டு அரசிடம் எவ்வாறு இதற்கான விளக்கத்தை கேட்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட வில்லை என்றும் கேமரூன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top