Cine

ஹாக் செய்யப்பட்ட கண்ணக்குகளை திரும்ப பெற வழிமுறைகள் :

இன்றைய உலகில் பேஸ்புக் என்பது மனிதனின் அன்றாட தேவையாகவே மாறி வருகிறது எனலாம், அந்த அளவுக்கு உலகத்தையே கவர்ந்து வருகிறது. பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி. அது ஹாக்கர் உங்கள் Account மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறலாம். முதலில் உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும். லாக்-இன் ஆகாவிட்டால் இந்த இணைப்புக்கு சென்று “My Account Is Compromised” என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வரவும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை தரவும். இதில் முதல் பகுதியை பயன்படுத்தி மீட்க தான் பெரும்பாலும் வாய்ப்பு அதிகம். Email -sign in செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல் Phone – நீங்கள் பேஸ்புக்கில் கொடுத்துள்ள போன் நம்பர் Facebook username: உங்கள் Profile பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். உங்கள் User Name உங்களுக்கு தெரியாவிட்டால் நண்பர்களிடம் சொல்லி கேட்கலாம். அவர் உங்கள் Profile-ஐ பார்த்தால் தெரியும். நண்பர் பெயர் கொடுத்து தேடுவது கொஞ்சம் கடினமான தேடல். இப்போது நீங்கள் கொடுத்த தகவல்படி உங்கள் பேஸ்புக் கணக்கு காட்டப்படும். உங்கள் இப்போதைய பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம், அல்லது பழைய பாஸ்வேர்ட் கொடுத்து Password Reset செய்ய முயற்சி செய்யலாம். பழைய பாஸ்வேர்ட் என்றால் உங்கள் ஈமெயில் கணக்கை நீங்கள் ஓபன் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு code வரும், அதை நீங்கள் கொடுத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும். இதில் மீட்க முடியவில்லை என்றால் I can’t identify my account என்ற பக்கத்தில் நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் உங்கள் தகவல்களின் படி பேஸ்புக் உங்களை விரைவில் தொடர்பு கொள்ளும். - See more at: http://www.tamilspace.com/2013/10/Facebook-account-to-get-back.html#sthash.ZbrYQeht.dpuf
14 Nov 2013

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top