Cine


 தெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் சீமாந்திராவில் 48 மணி நேர சாலை மறியல் போராட்டம் நேற்று தொடங்கியது. தெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12, 13ம் தேதியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆந்திராவை பிரிக்கக் கூடாது என கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் சீமாந்திரா முழுவதும் 48 மணி நேர சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை மறியல் தொடங்கியது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மரங்களை வெட்டி போட்டும், டயர்களை கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு, தனியார் பஸ்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. நகர எல்லைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தூரத்திலேயே லாரிகளும் நிறுத்தப்பட்டன. 

கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா உட்பட வெளி மாநில பஸ்களும் எல்லையில் தடுக்கப்பட்டன. சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, காளஹஸ்தி, காணிப்பாக்கம் போன்ற கோயில்களுக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். பள்ளி மற்றும் கல்லூரி வேன், பஸ்களும் இயக்க முடியாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.திருப்பதியில் திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி தலைமையில் நேற்று காலை, மாநகராட்சி அலுவலம் அருகில் உள்ள மார்க்கெட் சந்திப்பில் சாலை மறியல், தர்ணா மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் திருப்பதி சென்ற பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஸ்ரீகாளஹஸ்தியில் நடந்த மறியலால், 20 கி.மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  

0 comments:

Post a Comment

 
Top