Cine


பிலிப்பைன்ஸ் நாட்டை  ஹையான் என்று பெயரிடப்பட்டுள்ள அதிபயங்கர புயல் தாக்கியுள்ளது.  புயல் காரணமாக மணிக்கு 235 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது. பலத்த மழையும் பெய்கிறது. இதனால் சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகள் இடிந்துள்ளன. ஒருவர் பலியாகியுள்ளார். மின்சார சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  கடலோரப் பகுதி மக்களை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு பிலிப்பைன்ஸ் அரசு கேட்டுக்கொண்டுடது. அதன்படி அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புயலில் ஒருவர் கூட பலியாகி விடக்கூடாது  என கருதி கடலோரப்பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வாழ்கிற மக்களை வெளியேற்றி பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு புயலினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top