Cine

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவுகளில் 85 காலிப் பணியிடங்கள் உள்ளன.


இதற்கு தகுதியுடையவர்கள் பெங்களூரு, ஹைதராபாத், அல்லது போபாலில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதில் உளவியல் சோதனை, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை அடங்கும்.

இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்ததாக மருத்துவ ரீதியிலான உடல் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர்.

நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன ரயில் கட்டணம் அளிக்கப்படும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி பெறுபவராக சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும்.

முதல் ஆண்டில் கயாவில் உள்ள ஆபிஸர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் அடிப்படை ராணுவ பயிற்சிகள் வழங்கப்படும்.

நான்கு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள், ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியில் அமர்த்தப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

0 comments:

Post a Comment

 
Top