Cine



ராமதாஸ்:-இலங்கையை நீக்குவதே தமிழர்களின் இலக்கு

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குவதும், போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் மட்டுமே தமிழர்களின் இலக்காக உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களை அலட்சியப்படுத்தும் வகையில், மத்திய அரசு இன்னும் திட்டவட்ட முடிவை அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோரின் எதிர்ப்புக் குரல்கள் வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் மாற்றுக் கருத்துகளை தெரிவித்து, திசைத் திருப்ப முயல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்க கூடாது என்றும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழீழம் அமைப்பது குறித்து ஐ.நா மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top