Cine

செய்ல் நிறுவனத்தில் டெக்னிக்கல் வேலை

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதும் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் மகாரத்தினா நிறுவனமாகும். செய்ல் நிறுவனத்தின் பர்ன்பூர் கிளையில் டெக்னிகல் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அதே போல் சேலத்தில் உள்ள செய்ல் நிறுவனத்தில் உள்ள 53 அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : சேலம் செய்ல் நிறுவனத்தில் அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பர்ன்பூரில் உள்ள செய்ல் நிறுவனத்தில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பிரிவில் 264ம், அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பிரிவில் 286 காலி இடங்களும் சேர்த்து மொத்தம் 550 டெக்னிகல் காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பதவிகளில் உட்பிரிவுகளாக செராமிக்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிகல், மெட்டலர்ஜி, எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், டர்பைன் அட்டெண்டண்ட்
போன்றவற்றிற்கு தனித்தனியாக உள் ஒதுக்கீட்டு காலி இடங்களாக உள்ளன. முழு விபரங்களை இணையதளத்தில் அறியவும். 
வயது: 01.10.2013 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 
தகுதிகள்: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி மற்றும் அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி என்ற இரண்டு பதவிகளுக்குமே பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, கெமிக்கல், செராமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
அட்டெண்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், டர்பைன் அட்டெண்டண்ட் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும். சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். 
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : பாரத ஸ்டேட் வங்கியின் Power Jyoti ''account No.-31932241266 at Burnpurல் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Top