Cine

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தோனி தலைமையிலான டெஸ்ட் அணியில் முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, அஸ்வின், உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர். புவனேஷ்வர் குமார், முகமது சமி, ஜடேஜா, அம்பத்தி ராயுடு, சாஹா, இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜாவும் இடம் பிடித்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணிக்கு கவுதம் காம்பீர் தேர்வாகவில்லை. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி தலைமையிலான அணியில் ஷிகர் தவான், ரெய்னா, விராட் கோலிக்கு இடம் கிடைத்துள்ளது. ரோஹித் சர்மா, ரஹானே, யுவராஜ் சிங், அஸ்வின், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.  மோஹித் சர்மா, ஜடேஜா, அமித் மிஸ்ராவும் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top