Cine


சென்னை: அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் அருகே 300 கி.மீ தூரத்தில் புதியதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு லெகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு இந்த லெகர் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்ட தாழ்வுநிலை, மண்டலமாக மாறி புயலாக உருவாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள லெகர் புயல், நாளை போர்ட் பிளேயர் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார். 

மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புயல் காரணமாக நாகை, பாம்பன், கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் துறைமுகத்திலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில்மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

0 comments:

Post a Comment

 
Top