Cine

அமெரிக்கா ஜனாதிபதி மாளிகையில் இந்திய வம்சாவளி நடிகருக்கு முக்கிய பதவி; ஒபாமா நியமித்தார்!!


மெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நடிகர் கல் பென். இவரை ஜனாதிபதியின் கலை மற்றும் மனிதநேய கமிட்டி உறுப்பினராக ஒபாமா நியமித்தார். நடிகர் கல் பென் ஏற்கனவே ஒபாமாவின் முதல் தடவை பதவிக்காலத்திலும் வெள்ளை மாளிகையில் தேசிய கலை கொள்கை கமிட்டி மற்றும் பொதுநிர்வாக பிரிவிலும் பணியாற்றி இருக்கிறார். பிறகு அவர் 2012–ல் ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவில் இடம்பெற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் மத்தியில் ஆதரவை திரட்டினார்.
தற்போது கல் பென் மீண்டும் வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் நிர்வாகத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை பெறுகிறார். நியூஜெர்சியில் பிறந்த அவர் டி.வி. நாடக நடிகர் மட்டுமின்றி சினிமாவிலும் நடித்துள்ளார். படத்தயாரிப்பு மற்றும் எழுத்தாளராகவும், ஆசிய–அமெரிக்க சினிமா ஸ்டூடியோவில் விரிவுரையாளராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல இந்திய வம்சாவளி டாக்டரான விவேக் ஹாலேஜெரி மூர்த்தி(36) என்பவரை சர்ஜென் ஜெனரலாக கடந்த வாரம் ஒபாமா நியமித்தார். இந்த நியமன அறிவிக்கை முறைப்படி செனட்சபை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

 
Top