Cine

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து எம்.பி.க்கள் வெளியேறினர்!!

காமன்வெல்த் மாநாடு இந்த வாரம் இலங்கையில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, இலங்கை இறுதிகட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக ஆஸ்திரேலியா செனட் பெண் உறுப்பினர் லீ ரியானன் மற்றும் நியூசிலாந்து எம்.பி. ஜான் லாகி ஆகியோர் இலங்கை சென்றனர்ஆனால் கொழும்பில் அவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை குடியுரிமை அதிகாரிகள் அவர்களின் பாஸ்போர்ட்டுகளை வலுக்கட்டாயமாக பறித்தனர். மேலும் அவர்களிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து எம்.பி.க்கள் இருவரும் இலங்கையை விட்டு வெளியேறினர்.
மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ள இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவது பயனற்றது என்று அவர்கள் கூறியுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ ஆகியோர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

Post a Comment

 
Top