Cine


 இங்கிலாந்தின் சேனல்–4 என்ற டெலிவிஷன் நிறுவனம், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து, அவ்வப்போது பரபரப்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட வீடியோ தொகுப்பில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்நிலையில் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியாவை, இலங்கை ராணுவம் கொடூரமாக கொலை செய்த பதை பதைப்பு காட்சிகளை, இங்கிலாந்தின் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சில நாட்களில் இலங்கையில் காமன்வெல்த் நாடுகள் மாநாடு தொடங்க இருக்கும் நிலையில், இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான வீடியோ ஆதார காட்சிகள் இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இலங்கை இதனை மறுத்துள்ளது. காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ள நிலையில் ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. இசைப்பிரியா தொடர்பான சேனல்-4ன் வீடியோவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது முழுவரும் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. போரின் போது சரண் அடைந்த அல்லது பிடிபட்ட புலிகள் ஒருவரும் ராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர்  வணிகசூர்யா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top