Cine

விசாரணை அறிக்கை தாக்கல் பரமக்குடி 

துப்பாக்கி சூடு  குறித்து இன்று:

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி சம்பத்தின், விசாரணை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி பரமக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தற்காப்பு செயலே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் நடவடிக்கைகள் பயனற்றுப் போனதால், வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு அவசியமாகி விட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தாமல் விட்டிருந்தால், தென் மாவட்டங்களில் வன்முறை பரவியிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வன்முறையாளர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நெருக்கடியான நேரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், காவல்துறையினர் ஒரு சார்பாக செயல்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் நீதிபதி சம்பத் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த்துறையினருக்கு அறிக்கை விவரம் அனுப்பப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே அமலில் இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top